வள்ளலார் வழியில்

Jun 17, 2009 | Uncategorized | 0 comments

நேற்று (17-6-2009)மதுரை சென்று வந்தேன்.அங்கு பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களையும்,எழுத்தாளர் வேல இராமமூர்த்தி அவர்களையும் சந்தித்து வந்தேன்.எழுத்தாளர் அவர்களின் வீடு அவனியாபுரத்தில் இருந்து,அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் தான் திருப்பரங்குன்றம் இருந்து.அங்கு சென்று வரலாம் என வேலா இராமமூர்த்தி அவர்கள் கூறினார்கள்.சென்று வந்தோம்.அங்கு நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது.13 ஆண்டுகளாக பாண்டியராசன் என்னும் அன்பர் செயலை எண்ணி மகிழ்ந்து,வியந்து போனேன்.திருப்பரங்குன்றத்தின் பின்புறமுள்ள குகைக்கோவில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு தீயர்களின் கூடாரமாக விளங்கியுள்ளது.

அந்நிலையை மாற்றி, மக்கள் வந்து செல்லகூடிய இடமாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உள்ளது என்று கூறலாம்.அந்த பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபொழுது அங்குள்ள குரங்குகள் மயில்கள் போன்ற உயிரினங்கள் உணவில்லாமல் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.குரங்குகள் எல்லாம் நகரை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளன.

இந்நிலைக்கு வருந்திய பாண்டியராசன் அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணிபோல் அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப்பழமும்,மயில்களுக்கு அரிசியும் வழங்க வேண்டுமென முடிவு செய்து அன்றிலிருந்து அதனைச் செயல்படுத்தியும் வருகின்றார்.அவர் வரவை எதிர்பார்த்து குரங்குகள் காத்திருக்கின்றன. ஒவ்வொருநாளும் மாலையில் பத்து வாழைத்தார் ,5கிலோ அரிசி கொண்டு வந்து குரங்குகளுக்கும் மயில்களுக்கும் வழங்கி வருகின்றார்.இப்பொருளை ஏற்றி வருதற்கு அவர் ஒரு ஆட்டோவும் வாங்கியுள்ளார்.

இதனோடு அந்த பகுதியில் உள்ள ஆலமரங்கள் எல்லாம் விழுதுவிட்ட செழித்து வளர விழுதுகள் தரையில் இறங்குவதற்கு குழாய்கள் அமைத்துள்ளார்.

அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
என்னும் குறளின் பொருளினை அறிந்து,தன் வாழ்க்கையின் கடமையாக எண்ணி ,கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றார்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *