பட்டத்து யானை

Jun 9, 2009 | Uncategorized | 0 comments

சுதந்திரப் போராட்டக்காலத்தில் எத்தனையோ அக்கினிக் குஞ்சுகள் சுதந்திர வேட்கை கொண்டு ,ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினர்.அவ்வாறு தென்னகப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு வீரனி வரலாற்றைப் பிண்ணனியாக வைத்து எழுதப்பெற்றதுதான் பட்டத்துயானை என்னும் புதினம்.

இந்நூலின் ஆசிரியர் குற்றப் பரம்பரை என்னும் நாவல் மூலம் எனக்கு அறிமுகமானார்.கடந்த புத்தக கண்காட்சியில் குற்றப் பரம்பரை என்னும் நாவலை வாங்கினேன் .அந்நாவலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான். அப்புதினத்தின் கதையோட்டத்திலும் ,கதை சொல்லும் உத்திமுறையாலும் ஈர்க்கப்பட்டு,ஆசிரியரிடம் பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.உடனே அப்புத்தகத்தை வெளியிட்ட காவியாப் பதிப்பகத்தாரிடம் தொடர்ப்பு கொண்டு ,அவருடைய அலைபேசி எண்ணை வாங்கி அவரிடம் புதினம் தொடர்பான என்னுடைய கருத்தினைக் கூறினேன்.அவரும் மிகமகிழந்தார். அன்றிலிருந்து எங்கள் நட்புத் தொடர்ந்து வருகிறது.

அவரின் அடுத்தப் புதினமான பட்டத்து யானை என்னும் புதினத்தை அனுப்பி வைத்தார். இப் புதினம் ஏற்கனவே ஜீனியர் விகடனில் வெளிவந்து வெகுஜன மக்களால் பரப்பரப்பாகப் பேசப்பட்டு,பாரட்டப்பட்ட நாவலாகும்.எனக்கு இப்போதுதான் இந்நாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆப்பநாட்டினைக் கதைக்களமாகக் கொண்டு, தென்னகப் பகுதியில் புரச்சிக்கு வித்திட்ட ‘சித்திரங்குடி மயிலப்பன்’ என்னும் வீரனின் கதையை மையப்படுத்தி இந்தாவல் எழுத்பெற்றுள்ளது.

ஆங்கில அரசுக்கு எதிராக 1799-செப்படம்பரில் பாஞ்சாலங்குறிச்சிப்போர்,1800 இல் மதுரை திண்டுக்கல் கிளர்ச்சி,1801 இல் சிவகங்கை போர்,1806 இல் வேலுர் கோட்டை கிளர்ச்சி,1808 இல் இராமன் நாயரது வயநாட்டுக் கிளர்ச்சி,1809 இல் தளவாய் வேலுத்தம்பியின் திருவிதாங்கூர் கிளர்ச்சி,1857-இல் சிப்பாய் புரச்சி, என எத்தனையோ கிளர்ச்சிகள் எழுந்தன.இவ் கிளர்ச்சிகளுக்கு எல்லாம் வித்தாக அமைந்த கிளர்ச்சிதான் 1799-ஆம் ஆண்டு ஏப்பரல் மாதம் 24 நாள் முதுக்குளத்தூரில் நடந்த கிளர்ச்சிதான் என இந்நூலாசிரியர் கூறுகின்றார்.

வரலாற்றுச் செய்தியை வைத்து எழுதப்பெற்ற இந்நாவல் தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் கதையினை நகர்த்திச் செல்கின்றார் கதையாசிரியர்.

ஆப்பநாடு என்றாலே வறட்சி,களவு,வெட்டு,குத்து,கொலை என்னும் திட்டமிட்ட கற்பிதங்களைப் பொடியாக்கி,ஆங்கிலேயரை எதிர்த்த போரில் ஆயிரமாயிரம் வீரர்களை அள்ளிக் கொடுத்த தியாக பூமியின் மறைக்கப்ட்ட சரித்திரத்தை வெளிக்கொணரவேண்டும் என்ற விருபத்தினால் இப்புதினத்தை எழுதியதாக இப்புதின ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

அவரின் எண்ணத்திற்கு ஏற்ப இந்நாவலைப் படிக்கும் போது, நமக்கு ஒரு வீர வரலாற்றினைக் காட்சியாகப் பார்ப்பது போல் உள்ளது., ரணசிங்கம் என்ற கதாபாத்திரத்தினை உருவாக்கி ,ஆங்கிலேயர்களுடன் அவன் மோதுவது மட்டுமல்லாமல் ,அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் அக்கினிக் குண்டுகளாய் மாற்றி,விடுதலை வேட்கையை அவர்களுடை உள்ளத்துள் பாய்ச்சி, ஆங்கிலேயல்களை எதிர்த்துப் போராடவைக்கின்றான்.ஆங்கில அரசினை எதிர்த்து மதம் கொண்ட யானையாக ரணசிங்கம் ஆடிய ஆவேச ஆட்டமே பட்டத்து யானை என்னும் இப்புதினமாகும்.

இப்புதின ஆசிரியர் பல உண்மை நிகழ்வுகளைக் கதையின் ஊடே கூறிச் செல்லுகின்றார்.
புதிதான ஒரு செய்தி

கோவிந்தசாமி என்ற கவிஞர் ஒருவர் அந்த பகுதியில் வாழ்ந்துள்ளார் எனபதும்,அந்த கவிஞர் தமிழ் கவிஞர்கள் யாரும் எட்டமுடியாத இடத்தை தொட்டவர் என்றும் ‘கெ கே என்ற கொம்புகள் இல்லாமல் ஆயிரத்து நானூத்தி நாற்பது வெண்பாக்களை எழுதியுள்ளார் என்பதையும் அறிமுடிகின்றது.அவர் எழுதிய பாக்களின் ஓலைச் சுவடிகள் இலங்கை யாழ்பாணம் நூலகத்தில் அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிற செய்தியை,எட்டயப்புரம் சுப்பிரமண்ய பாரதியைத் திரிவனந்தபுரத்தில் சந்தித்த தேசியவிநாயகம் பிள்ளையவர்கள் சொல்ல,மனைவி செல்லமாவின் கிராமம் கடையத்திலிருந்து நான்கு நாள்கள் நடையாக நடந்து பொத்தாம்பள்ளி வந்த சுப்பதமணிய பாரதி கோவிந்தசாமி புலவரைக் கண்டு அளாவிசென்றாராம்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *