இப்பாடலில் நக்கீரர் கூதிகாலத்தை அப்படியே நம்முன் படம் பிடித்துக்காட்டுகின்றார். குளிகாலத்தில் நடக்க்கூடிய ஒவ்வொரு செயல்களையும் நுட்பமாக பதிவுசெய்துள்ளார்.
கூதிர் காலத்தின் இயல்பு
மேகங்கள் மேருமலையை வலம் வந்து உலகம் குளிரும்படி மழையைப் பொழிந்தன.மழையால் பாதிக்கப் பட்ட இடையர்கள்,மாடுகளை ஓட்டும் கோல்களைக் கொண்டு,மாடுகளை மேட்டுப் பாங்கான இடத்திற்கு விரட்டி மேயும்படி விட்டனர்..இடையர்கள் மார்பில் அணிந்திருந்த காந்தள் மலர் மாலைகள் மழையால் பொழிவிழந்தன.அவர்கள் குளிரால் அவர்களுடைய பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டன,அவர்களுடைய நடுக்கம் குறைய நெருப்பினை மூட்டி குளிர்காய்ந்தனர்.
மேய்சலுக்குவிட்ட விலங்குகள் எல்லாம் குளிரால் மேயாமல் நின்றன.குரங்குகள் குளிரால் நடுங்கின.காற்று மிகுதியால் பறவைகள் மரங்களில் இருந்து கீழே நிலத்தில் விழுந்தன.பசுக்கள் கன்றுக்குப் பால் கொடுக்காமல் காலால் உதைத்தன.புதர்கள் தோறும் முசுண்டைப் பூக்கள் பூத்து குலுங்கின. பீர்கம் மலர்கள் எங்கும் மலர்ந்து பொன்னிறமாக காட்சியளித்தன.மழையின் வரவால் விரைந்து வந்த நீரில் கயல் மீன்கள் நீரின் எதிர்த்து நீந்தி வந்தன.மழை ஓய்ந்ததும் பசிய கால்களை உடைய கொக்கு கூட்டங்களும்,வரியையுடைய நாரை கூட்டங்களும் பரந்து விரிந்த கரிய வண்டலும் சேறும் கலந்து ஈரமுடைய வெண்மணலிலிருந்து மீனகளை உண்டன.
வானிடத்தில் எழுந்த வெண்முகில்கள் துளிகளைச் சிதறின.வயல்களில் நீருக்கு மேல் உழர்ந்து வளர்ந்த நெற்பயிற்களை ஈன்ற நெற்கதிர்கள் முற்றி விளைந்திருந்தன. பருத்த அடியினையுடைய கமுகின் நீலமணி போன்ற தலையினை உடைய காய்கள் உள்ளே நீர் நிறைந்தார் போல திரண்டு முற்றி இருந்தன.மலர்கள் நிறைந்த சோலையிடத்துள்ள மரங்கள் கிளைகளில் தங்கி நீரைச் சொரிந்தன.இயர்ந்த மாடங்களும் செல்லவமும் மலிந்த பழைய ஊரிடத்து அகன்று நீண்ட தெருக்கள் ஆறு கிடந்தார் போல காட்சியளித்தன.தழை விரவி தொடுத்த மாலைகளைக் கழுத்தில் அணிந்தவரும்,வண்டு மொய்கின்ற கள்ளை உண்டு களிப்பு மிகுந்தவர்களும்,முன்னும் பின்னும் தொங்கும் படி உடையணிந்தவர்களும்,முறுக்கேறிய உடம்பினருமாகிய மிலேச்சர் மழைத்துளிக்கு அஞ்சாதவர்களாய் தெருக்களில் திரிந்தனர்.மாடப்புறாக்கள் இரவு பகல் அறியாது மயங்கி கிடந்தன.சேவற் புறாக்கள் தனது பேட்டுடன் வெளியிற் சென்று இரைதேடி உண்ணாது பலகை மீது இருந்து கடுத்த கால்களால் ஆறும்படி காலை மாற்றி மாற்றி இருந்தது.
0 Comments