மொழியியலில் கணினி பயன்பாடு

May 23, 2009 | Uncategorized | 0 comments

கேரளப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆறு நாள்களாக நடைப்பெற்ற மொழித்துறையில் கணினி பயன்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இன்று ஊர்திரும்பினேன்.மிக பயன்னுள்ளதாக இருந்து.நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள்.இதுதான் நான் முதல் முதலாக கேரளா சென்றது. சென்ற சனிக்கிழமை கிளம்பி ஞாயிறு காலையில் திருவனந்தபுரத்தைச் சென்றடைந்தேன்.கேரளா சென்ற நேரம் பயங்க வெயில்,பயங்கர வேர்வை ஏன் வந்தோம் என்று இருந்து. இருந்தாலும் பசுமை ,எங்கும் நிறைந்து காணப்படும் மரங்கள் மனதுக்கு மகிவூட்டியது. வரும் இரண்டுநாளில் இருந்து மழை பெய்யத்தொடங்கியது.
ஆனாலும் பூமி குளிரவில்லை.
கேரளாவின் தலைநகரான திருவனந்த புரத்தின் பேருந்து நிலை மிக மோசமான நிலையில், ஆனால் அங்குள்ள மக்கள் பழக மிக இனிமையானவர்களாக இருக்கின்றார்கள்.நானும் என்னுடன் வந்த தமிழ்ப் பல்கைக்கழகப் பேராசிரியர் மங்கையர்கரசி அவர்களும் கழக்கூட்டத்திலி உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.அங்கிருந்த அனைத்துப் பெண்களும் மிக அன்புடன் பழகினர்.அவ்விடுதி காப்பாளர் சீனா என்ற பெண் மிகவும் கவர்ந்து விட்டாள் . அப்படி ஒரு பாசத்துடன் பழகினாள்.அவளுக்கு மலையாளம் மட்டிமே தெரியும் ,இருந்தாலும் நாங்கள் சொல்வதைப் புரிந்து கொண்டு எங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தாள்.அன்புக்கு மொழி தேவையில்லை என்று அப்போது புரிந்தது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *