திருமுறை அருட்பணி அறக்கட்டளைச் சார்பில் ஆண்டின் கோடைக்காலத்தில் சைவசமயப் பயிற்சி வகுப்பினை நடத்துகின்றனர்.இந்த ஆண்டின் சைவசித்தாந்த பயிற்சி வகுப்பு இன்று(2-5-2009)தொடங்கியது.இவ் வகுப்பு தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு தொண்டை மண்டல ஆதினம் குருமகாசந்நிதானம் அவர்கள் தலைமையில் விழா சிறப்பாகத் தொடங்கியது.இவ் விழாவில் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் நூலுக்குப் புலவர் சரவண சதாசிவம் அவர்கள் எழுதிய உரைவிளக்கம் நூல் வெளியீடும் நடைபெற்றது.
விழாவினைத் தொடர்ந்து 12.10 இலிருந்து 1.10 வரை முனைவர் அ.பாலறாவாயன் அவர்கள் சிவஞானபோதகத்தினைப் பற்றி விளக்கம் அளித்தார்கள். மெய்கண்ட தேவரால் எழுதப்பெற்ற சிவஞனபோதகம் என்னும் நூல் தமிழில் எழுதப்பெற்ற முதல் நூலே என்பதை தக்க காரணங்களுடன் விளக்கினார். இது மொழிப்பெயர்ப்பு நூல் எனக் கூறும் சிவஞான முனிவர் அவர்களின் கருத்து ஏற்புடையதல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
மெய்கண்டரின் இயற்பெயர் சுவேத பெருமாள் என்பதும் ,அவருடைய குரு பரஞ்சோதி முனிவர்,அவருடைய குருவின் பெயரான சத்தியஞான தர்சினி என்பதைத் தமிழ் படுத்தி மெய்கண்டார் எனப் பெயர் சூட்டப்பெற்று இருக்கலாம்,இல்லை மற்ற சமய நூல்களை எல்லாம் ஆய்ந்து பொய்மை கண்டு மெய்யுணர்ந்த்தால் மெய்கண்டார் எனப் பெயர் பெற்றிருக்கலாம்,அல்லது சிவஞானபோதகத்தில் மெய்கண்டார் என்னும் சொல்லாட்சி பயின்று வந்துள்ளதால் சிறப்புக் கருதி மெய்கண்டார் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என அவர் பெயர் தோன்றியதற்கான காரணத்தை விளக்கினார்கள். சிவஞானபோதக நூலின் அமைப்பை விவரித்தார்.
மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு சைவசமயத்தைப் பற்றி ஒரு அறிமுக உரையினை முனைவர் டி.பி.சித்தலிங்கய்யா வழங்கினார்கள்.சைவசமயம் மிகப் பழமையான சமயம் என்பதை வரலாறு,இலக்கியம்,மரபு ஆகிய சான்றுகளின் வழி எடுத்துரைத்தார்கள்.அதைனைத் தொடர்ந்து முனைவர் அ.பாலறாவாயன் அவர்கள் சிவஞானபோதகத்தின் பாயிரம் அவையடக்கம் பற்றி விளக்கினார்.
சைவசித்தாந்த வகுப்பு
முனைவர் கல்பனா சேக்கிழார்
பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
More From This Category
-
பூனையும் நானும்
கதிரவன் தன் கதிர்களால் மெல்ல வருடிக்கொடுக்கும் நேரம். வீட்டின் பின்புறம் மதில் மீது ஒரு பூனை அதன் குட்டியுடன் இருந்தது. புதிய வரவு. முன்பின் அதனை ...
-
இரண்டாம் ஆண்டு – மூன்றாம் பருவம்
இரண்டாம் ஆண்டு – மூன்றாம் பருவம் ITAM – 31 – அற இலக்கியமும் காப்பியமும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் பதினொன்று (திருக...
-
முதலாமாண்டு- இரண்டாம் பருவம்
பக்தி இலக்கியமும் சிற்றிலக்கியமும் பன்னிரு திருமுறைகள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு அருளப்பெற்ற பாடல்கள். வினாயகர், முருகன் பற்றிய சில பா...
-
இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்
இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம் 19ITAMC41 – சங்க இலக்கியமும் செம்மொழி வரலாறும் திணை முதற்பொருள்( நிலம், பொழுது) உரிப்பொருள் கருப்பொருள்(தெய்வம், ம...
-
வேளாண்மையியல் (பட்டயம்)
வேளாண்மையியல் (பட்டயம்) TAM 228: தமிழ் வழி தகவல் பரிமாற்ற வழிமுறைகள் கலைச் சொற்கள் எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ...
-
உலகப் பெருந்தமிழர் பேராசிரியர் பி.விருதாசலனார்
தலைநாள் போன்ற விருப்பினர் கல்பனாசேக்கிழார் வாடா … வாடா … எப்படிடா இருக்க என்று உள்ளன்பு ததும்ப கூறும் சொற்கள். பாசாங்ற்ற புன்னகை. கம்ப...
0 Comments