சாப்பிட

May 1, 2009 | Uncategorized | 0 comments

தங்க தட்டில் சாப்பிடுவதின் குணம்

தங்கத் தட்டில் சாப்பிடுவது தோஷங்களைப் போக்கும்.உடம்பைத் தேற்றும்.இதமானது.

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால்

கண்களுக்கு நலம்.பித்ததைப் போக்கும்.கபம் வாயுவை இவைகளை உண்டாக்கும்.

வெங்கலத்தட்டில் சாப்பிட்டால்

புத்தியை வளர்க்கும்.உணவின் சுவையைக் கூட்டும்.பித்ததைத் தெளிவுபடுத்தும்

இரும்பு கண்ணாடிப் பாத்திரங்களில் சப்பிடுவதால்

சித்தியைக் கொடுகிறது.வீக்கம்,சோகை,இவைகளைப் போக்குகிறது.காமாலையைப் போக்குவதில் சிறந்தது. வலிமையைக் கொடுகிறது.

வாழை இலையில் சாப்பிடுவதால்

உடம்புக்கு வலிமையைக் கொடுக்கும் விஷதோஷத்தைப் போக்கும்.ஆண்மையை வளர்க்கும்.உணவின் சுவையை மிகுவிக்கும்.பசியைத் தூண்டும்.குளிர்ச்சியை உண்டாக்கும்.உடம்புக்கு நல்ல ஒளியை உண்டாக்கும்.

பூவரச இலையில் சாப்பிடுவதால்

வாயு ,கபத்தைப் போக்கும்,பசியைத் தூண்டும்.வயிற்றில் உண்டாகும் கட்டி போன்ற நோய்களைப் போக்கும். உணவின் சுவையைக் கூட்டும்.

பலா இலையில் சாப்பிடுவதால்

பலா இலையில் சாப்பிடுவது சிறந்தது.சுவையை உண்டுபண்ணுகிறது.வாயு கபம் இவைகளைக் குறைக்கின்றது.உடம்பைத் தேற்றுகின்றது.பசித்தீயைத் தூண்டுகிறது.

ஆல்,அத்தி,இத்தி,அரசு இலைகளில் சாப்பிடுவதால்

இவ் இலைகளில் சாப்பிடுவது சிரமமானது. ஆனால் குளிர்ச்சியை உண்டு பண்ணுகிறது.தண்ணீர் தாகம்,எரிச்சல்,பித்தம் இவைகளைப் போக்குகிறது.புத்தியை வளர்க்கிறது.வாயு ,கபம் இவைகளை உண்டாக்குகிறது.

சாப்பிட கூடாத இலைகள்

தாமரை இலையில் சாப்பிடுவது,விரும்பதக்கதல்ல.அதில் சாப்பிடுவதால் வாயு தொல்லை ஏற்படும்.பசித்தீயை அணைத்துவிடும்.வறட்சியை உண்டாக்கும்.அழகைக் குறைக்கும்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *