திருக்குறள் முதல் உரையாசிரியர்

Apr 24, 2009 | Uncategorized | 0 comments

காலந்தோறும் கற்போருக்குப் புதுப்பொருளைக் காட்டி,வாழ்வின் உயர்வுக்குத் வழிகாட்டியாய் விளங்கும் அறநெறி நூல் திருக்குறளாகும்.குறளின் பொருள் சுவை உண்கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பது. அதனால்தான் இதனைக் கற்போரெல்லாம் உரையெழுதவேண்டுமென எண்ணம் கொள்கின்றனர். பிற்காலத்தில் பல உரைகள் தோன்றுகொண்டு இருக்கின்றன. அவ் உரைகள் எல்லாம் பெரும்பாலும் பழைய உரைகளைத் தழுவியே அமைந்துள்ளது எனலாம். சில குறள்களுக்கு மட்டுமே வேறுபட்ட உரைகளைக் காணமுடிகின்றது.
பழைய உரையாசிரியர்கள் அல்லது மரபுரையாசிரியர்கள் என்போர் பதின்மர்.அவர்களுள், இன்று நமக்கு ஐவர் உரைகளே கிடைத்துள . இவ் ஐவர் உரைகளுள் காலத்தால் முற்பட்ட உரை மணக்குடவர் உரையாகும்.ஆனாலும் இவர் உரையினை நோக்குழி,,இவருக்கு முன் உரைகள் இருந்துள்ளதைக் காணலாம்.
மணக்குடவர் உரையில் தடிந்தெழுலி தானல்கா தாகிவிடின் (17) என்னும் குறளுக்கு உரை கூறுகையில் ‘தடிந்து’ என்பதற்கு ‘கூறுபடுத்து’ என்று உரைப்பாரும் உளர் என்றும்,’செவிகைப்ப சொற்பொறுக்கும்’ என்பதற்குப் ‘புரோகிதர் தன்னிடத்துச்சொல்லுஞ் சொற்களைப் பொறுக்க வல்லென்பாரும் உளர்’என்றும் காணப்படுதலால்,இவருக்கு முன் திருக்குறளுக்கு உரைகள் இருந்துள்ளதை அறியலாம்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *