உலகம் அற இலக்கியங்களுள் சிறந்ததும், உலக பொதுமை கருத்துக்களைத் தாங்கியுள்ளதுமான நம் தமிழ் நூல்,அறநூல் திருக்குறள்.இக்குறள்கள் அனைத்தும் மணற் கிளைக்க நீருறுவது போல, குழந்தைகள் உண சுரக்கும் தாய்பால் போல கற்கும் தோறும் புதுப்பொருளை விரித்துச் செல்கிறன. அதனால் அதனைக் கற்பார் பலர்.
சிலர் அதற்கு உரை வரைந்துள்ளனர்.அவர்களுள் பழைய உராயாளர்கள் என்று கூறப்படுவோர் பதின்மர்.அவர்களுள் இன்று நமக்கு ஐவர் உரைகளே கிடைத்துள. மணக்குடவர் , காளிங்கர்,பரிப்பெருமாள்,பரிதியார்,பரிமேலழகர் என்போர் ஆவர் . இவ் ஐவர் உரைகளுள் காலத்தால் முற்பட்டவர் மணக்குடவர், இதனை அவர் உரையின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.
0 Comments