திருக்குறள் வகுப்பு

Apr 15, 2009 | Uncategorized | 0 comments

தஞ்சாவூர் உலகத் திருக்குறள் சார்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ,தஞ்சை பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள வீரராகவா உயர்நிலைப் பள்ளியில் திருக்குறள் வகுப்பு நடைப்பெற்று வருகின்றது. பல்வேறு தமிழறிஞர்கள் இவ் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.
பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிமணியம் அவர்கள் மக்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாடம் நடத்துகின்றார்கள்.இவர் பல்வேறு திருக்குறள் உரைகளை ஒப்பிட்டு , சிறந்த உரை,அக்குறளுக்குப் பொருத்தமாக அமைந்த உரைகளைக் கூறி, குறளுக்குப் பொருத்தமான நடைமுறை வாழ்வியல் செய்திகளையும் கூறுகின்றார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வகுப்பு கடந்த ஞாயிறு 12.4.2009 அன்று 100 அதிகாரத்தைத் தொட்டது.அதனால் இதனை ஒரு சிறு விழாவாக அமைத்திருந்தார்கள்.அவ்விழாவில் பண்புடைமை அதிகாரத்திலிருந்து ஐந்து குறட்பாக்களைப் பேராசிரியர் கு.வெ.பா.நடத்தினார்கள்.ந.மு.வேங்கடசாமி தாளாளர் பேராசிரியர் பி.விருதாச்சலம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *