அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை

Nov 15, 2008 | Uncategorized | 0 comments

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது சென்னையில்
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்றது.
அப்பொழுது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,
வாழ்வியல் கருவூலமாகத் திகழக் கூடிய திருக்குறளுக்குப் பல்வேறு ஆராய்ச்சிகள்

நடைபெறவேண்டும் என்ற நோக்கில் சென்னை, அண்ணாமலை,
மதுரை ஆகிய பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 3 இலட்சம்
வைப்புநிதியாக அளித்துத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கையை உருவாக்கினார்கள்.

அத் திருக்குறள் இருக்கை வழி கற்றுத்துறை போகிய அறிஞர்கள் திருக்குறள் தொடர்பான
பல்வேறு அரிய ஆராய்ச்சி நூல்களைத் தழிழுலகுக்கு வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள்
ஆராய்ச்சி இருக்கை மூலம் சிறந்த ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்துள்ளன.

1.திருக்குறள் பொருளதிகாரம்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1973

2.காப்பியங்களில் திருக்குறள்
திரு.ச.தண்டபாணி தேசிகர்
1974

3.திருக்குறளும் பிற உரையாசிரியர்களும்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1975

4.வள்ளுவரும் கம்பரும்
திரு.ச.தண்டபாணி தேசிகர்
1975

5.பரிமேலழகர்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1978

6.வள்ளுவத்தில் மெய்ப்பொருட்சுவடுகள்
திரு.ச.தண்டபாணி தேசிகர்
1980

7.திருக்குறளும் தமிழ்பாரத நூல்களும்
திரு.க.இராமலிங்கம்
1980

8.தெய்வப் பனுவல்களில் திருக்குறள்
திரு.அருணை வடிவேல் முதலியார்
1983

9.பரிப்பெருமாள் உரையும் உரைத்திறனும்
திரு.கா.ம.வேங்கடராமையா
1983

10.திருக்கறள் இயல்-8
திரு.அருணை வடிவேல் முதலியார்
1984

11.திருக்குறள் உரைவேற்றுமை(அறத்துப்பால்)
டாக்டர் இரா.சாரங்கபாணி
1989

12..திருக்குறள் உரைவேற்றுமை(பொருட்பால்)
டாக்டர் இரா.சாரங்கபாணி
1992

13.தெய்வப் பனுவல்களில் திருக்குறள்(பத்தாம் திருமுறை)
திரு.அருணை வடிவேல் முதலியார்
1992

14.தெய்வப் பனுவல்களில் திருக்குறள்(பத்தாம் திருமுறை)
திரு.அருணை வடிவேல் முதலியார்
1992

15.திருக்குறள் உரைவேற்றுமை(காமத்துப்பால்
டாக்டர் இரா.சாரங்கபாணி
1994

16.வள்ளுவர் வகுத்த காமம்
டாக்டர் இரா.சாரங்கபாணி
1994

17.சித்தர் இலக்கியத்தில் திருக்குறள்
டாக்டர் இரா.சாரங்கபாணி
1994

18.பெரிய புராண வரலாறுகளும் முதுமொழி வெண்பாக்களும்
திரு.கா.ம.வேங்கடராமையா
1999

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *