அந்திமாலை பற்றி கூறுங்காலை

Oct 10, 2008 | Uncategorized | 0 comments

முனைவர் பேராசிரியர் கவிஞர் வெற்றிச்செல்வன் அவர்களுடன் உரையாடிய போது ,அந்திமாலையைப் பற்றி கூறிய கவிதை
மாலை பற்றி
என்ன நினைக்கிறீர்கள்
என்று கேட்டு
ஒளிபரப்ப பணிக்கப்பட்டிருந்தேன்
பகலும் இரவும்
முத்தமிட்டுக் கொள்ளும் நேரம்
என்றான் கவியோகி
ஓங்காரப் பேரிரைச்சல் கொண்ட
வாழ்வினின்றும் ஒதுங்கி
நுரைக்க நுரைக்க
போதை
கிறுகிறுக்க
மது குவளைகளில்
ஜலதரங்கம் கேட்க
முன்மொழியப்படுகிற
பகலின் பின்பகுதி
என்றான் குடிமகனொருவன்
காமன் கிளர்ந்தும்
நினைவுகள் கவியாவிட்டாலும்
பரவாயில்லை
நசுங்கிப் புழுங்கும்
உக்கிரப் பகலில்
அடக்குமுறைகளிலிருந்து
மனதை வருடி ஒத்தடம் கொடுக்க
மென்காற்று சுமந்து வரும் ஆறுதல்
இது காதலனொருவனின்
கனிவுரை
அரசு ஊழியம் பார்க்கும்
பெண்ணொருத்தியோ
மாலை என்பது
அலுவலக வன்முறைக்கும்
குடும்ப வன்முறைக்குமான
சிறுதொலைவு பயணமென்றாள்
எனக்கும் மாலை பற்றி
சொல்வதற்கு இருக்கிறது ஒன்று
கடைசி கடைசியாய்
பார்த்த உடல் மொழிப்படி

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *